வீட்ல வயசானவங்க இருந்தா இதை மட்டும் ஃபாலோ செய்ய சொல்லுங்க, ஆரோக்கியமா இருப்பாங்க!

நீண்ட காலம் வாழும் ஆசையை காட்டிலும் ஆயுள் காலம் வரை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதை தான் முதியோர்கள் விரும்புகிறார்கள்.

காசநோய், சீதபேதி,தொற்றுநோய்கள் என பல நோய்கள் மனிதர்களை பலி வாங்கி கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இன்று மருத்துவம் பெருமளவு முன்னேறிவிட்டது. மாரடைப்பு வந்தாலும் உயிரிழப்பை தடுத்து அவர்களது ஆயுளை நீட்டிக்க செய்யும் மருத்துவ வசதிகள் அதிகரித்துவிட்டது.

தீரா நோய்களான நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் எல்லாமே கட்டுக்குள் வைக்க பாதுகாப்பான சிகிச்சை முறைகள் உள்ளது. இந்த நோய்களே வராமல் இருக்க இளமை பருவம் முதலே கடைபிடிக்க வேண்டிய வாழ்வியல் முறைகளையும் மருத்துவம் கற்றுத்தந்துள்ளது. முதுமை காலத்தில் ஆரோக்கியமாக வாழ என்ன செய்யலாம் என்ற குறிப்பை தான் இப்போது சுருக்கமாக பார்க்க போகிறோம்

ரத்த அழுத்தம் கொண்டிருப்பவர்கள் வீட்டிலேயே அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ள வசதீயாக வீட்டிலேயே பரிசோதனை செய்யும் கருவி வாங்கி வைத்துகொள்ளலாம்.

எந்த நோயும் இல்லை ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று சொல்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி உரிய காலத்தில் பரிசோதனை செய்ய வேண்டும்.

வயதானவர்களுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, தைராய்டு, சிறுநீரக பிரச்சனை போன்ற நோய்களில் ஏதேனும் இருந்தால் மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை தவிர்க்காமல் எடுத்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள் இந்த மாத்திரைகளோடு வைட்டமின் டி. பி6, பி 12, கால்சியம் மாத்திரைகளையும் பரிந்துரைத்திருப்பார்கள். அதையும் தவிர்க்காமல் எடுத்துகொள்ளுங்கள்

மருத்துவர் குறிப்பிட்ட அளவு மட்டுமேயான மாத்திரைகளை எடுத்துகொள்ள வேண்டும். சுயமாக மாத்திரைகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். அதே போன்று மாத்திரைகள் வாங்கும் போது அது பயன்பாட்டில் உள்ளதா என்பதையும் பரிசோதிப்பது அவசியம். மாத்திரைகள் விஷயத்தில் எப்போதும் சமாதானம் ஆக வேண்டாம்.

Leave a Comment

Your email address will not be published.

Call Now Button